Tamil spiritual world
ad
Friday, 18 March 2022
அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil
சனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய OM NAMO NARAYANA
#PerumalSongs#TirupathiPerumalSongs
வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய திருப்பதி பெருமாள் பாடல்கள் திருப்பதிவாசா கோவிந்தா
om namo narayana
SUNG BY : MAHANADHI SHOBANA
PRODUCED BY :G.JAGADEESAN
LYRICS : ULLUNDURPETTAI SHANMUGAM
திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.
திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி, புரட்டாசி மாத பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
Thursday, 17 March 2022
2022 பங்குனி உத்திரம் சிறப்பு முருகன் பாடல்களை கேளுங்கள் 2022 PANGUNI UTHIRAM SPECIAL
#பங்குனி உத்தரம்#முருகன்#MuruganSongs
பங்குனி உத்தரம் கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் பாடல்கள்
Murugan Padalgal | Tamil Murugan Devotional Songs
SUNG BY :BOMBAY SARADHA PUSHPAVANAM KUPPUSWAMY VEERAMANIDASAN MAHANADHI SHOBANA
PRODUCED BY : G.JAGADEESAN
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார்.மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.
பங்குனி உத்தரம்:
பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.
சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.
ஓம் நமோ நாராயண சிறந்த திருப்பதி பெருமாள் பாடல் || OM NAMO NARAYANA SUPER HIT PERUMAL SONG
தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள்
சான் அண்டொனியோ கலை
அருங்காட்சியகத்தில் குபேரன் சிலை
அதிபதி செல்வத்தின் அதிபதி,
வடதிசையின் கடவுள்
வகை தேவன், லோகபாலன் (திக்பாலன்)
இடம் அலாகா
மந்திரம் ஓம் கம் குபேராய நமக.
ஆயுதம் கதை
துணை யட்சி
இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.
சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன்காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். [1]
திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.
புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.பத்மாவதி தாயாரை காதலித்த வெங்கடாஜலபதி, அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.
மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.
உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.
அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.
தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள்.....SRI KUBERALAKSHMI PADALGAL
SUNG BY : BOMBAY SARADHA
PRODUCED BY : G.JAGADEESAN
ASHTALAKSHMI MAHALAKSHMI SONGS
ASHTALAKSHMI MAHALAKSHMI KAVASAM - SUPRABATHAM
SUNG BY BOMBAY SARADHA
MUSIC M.R.VIJAYA
LYRICS M.R..VIJAYA AND TRADITIONAL
PRODUCED BY G.JAGADEESAN
ASHTALAKSHMI MAHALAKSHMI SONGS
KAASAM AND SUPRABATHAM INCLUDES IN THIS ALBUM
Friday Special Ashta Lakshmi Songs | Ashta Lakshmi Padal | Best Tamil Devotional Song | Tamil Songs
tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,telugu devotional songs,amman songs tamil devotional,amman kavasam - tamil devotional divine songs,devotional songs download
அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil
Anjanai Mainda || Sri Jaya Hanuman || Anjaneyar Songs || Hanuman tamil songs Singer : Prabhakar Music : Sivapuranam D V Ramani Lyrics : Ravi...
-
நடிகை வித்யா பிரதீப் தற்போது பி.எச்டி முடித்து விஞ்ஞானி ஆகியுள்ளார். இதுகுறித்து வித்யா பிரதீப் கூறுகையில் : #vidyapradeep Sankara Net...
-
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் ப...
-
இந்த பாடலைக் கேட்டால் விநாயகரின் அருள் கிடைத்து நினைத்த அனைத்தும் நிறை வேறும்/Vinai Theerkum vinyagaநமது தடைகள் அனைத்தும் விலகி ஓட மூல முதல் பொருளான விநாயகப் பெருமானின் பாடலை தினமும் கேட்டு விநாயகரின் அருளைப் பெறுவோம். பாடலை பாம்பே சாரதா அ...
-
பங்குனி உத்திரத்தில் நினைத்த அனைத்தும் வெற்றி பெற அபிஷேகத்துடன் கூடிய கந்த சஷ்டி கவசத்தை கேட்டு முருகனின் அருளைப் பெறுவோம். #kandhadasti#k...
-
tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amma...
-
ஸ்ரீ ராம ராம ராமேதி ராமே மனோரமே சஹஸ்ரா நாமா தத் துலியம் ராம நாம வாரணனே #Ramanavami #2022 Listen to the soulful #Ramakavasam Penned for Sri ...
-
#பங்குனி உத்தரம்#முருகன்#MuruganSongs பங்குனி உத்தரம் கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் பாடல்கள் Murugan Padalgal | Tamil Murugan...